டோனி விவகாரத்தில் அந்தர்பல்டி அடித்த யுவராஜ் சிங் தந்தை

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்
209Shares

டோனியை எப்பொழுதுமே கடுமையாக விமர்சனம் செய்து வரும் யுவராஜ் சிங்கின் தந்தை இந்த முறை அதற்கு மாறாக புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், யுவராஜ் சிங்கின் தந்தையுமான யோக்ராஜ் சிங், அடிக்கடி டோனியை கடுமையாக சாடி வருவார்.

தன்னுடைய மகனின் வாழ்க்கையை அழித்ததே டோனி தான் என விமர்சனம் செய்து தலைப்பு செய்திகளில் இடம்பிடித்தார்.

சமீபத்தில் கூட நடந்து முடிந்த 2019ம் ஆண்டு உலகக்கோப்பை தொடரில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்து, இந்திய அணி வெளியேறியதற்கு டோனி தான் காரணம் என குற்றம் சுமத்தியிருந்தார்.

இந்த முறை அதற்கு அப்படியே மாற்றாக, முதன்முறையாக டோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர், இந்திய அணியின் தோல்விக்கு நான் ஒருபோதும் டோனியை குற்றம்சாட்டியது இல்லை. டோனி ஒரு புகழ்பெற்ற வீரர். நானும் அவருடைய ரசிகர்களில் ஒருவர்.

அழுத்தமான சூழ்நிலைகளில் நல்ல முடிவுகளை எடுக்கக்கூடியவர். களத்தில் அவரது தலைமைத்துவ பண்புகள் இந்திய அணிக்கு பயனுள்ளதாகவே இருந்துள்ளது. அவர் நீண்ட காலமாக தேசத்திற்கு சேவை செய்து வருகிறார் என்பதில் சந்தேகமில்லை என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்