ஓய்வுக்கு இவர்கள் தான் காரணம்..! எதிர்வரும் உலகக் கோப்பையில் விளையாடும் மலிங்கா: இலங்கை உறுதி

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை ஒரு நாள் அணியில் புதிய வீரர்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தும் வகையில் தான் சர்வதேச ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக மூத்த இலங்கை நட்சத்திர வீரர் மலிங்கா கூறியுள்ளார்.

நாளை ஜூலை 26ம் தேதி கொழும்பில் நடைபெறவுள்ள வங்கதேச அணிக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியுடன், மலிங்கா ஒரு நாள் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறவுள்ளதாக அறிவித்துள்ளார். எனினும், மலிங்கா தொடர்ந்து டி 20 போட்டிகளில் விளையாடுவார்.

ஜூலை 25ம் தேதி இன்று அணியுடனான தனது கடைசி பயிற்சியை மேற்கொண்ட மலிங்கா கூறியதாவது, இந்த நேரத்தில் ஓய்வு பெறுவது குறித்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். இது புதிய வீரர்களுக்கு அவர்களின் திறமையை வெளிபடுத்தவும், அடுத்த உலகக் கோப்பைக்கு தயாராகவும் ஒரு நல்ல வாய்ப்பாக அமையும்.

நாங்கள் பல பின்னடைவுகளை சந்தித்து இருக்கலாம், ஆனால், மீண்டு வந்து அடுத்த உலகக் கோப்பையை வெல்லும் திறன் எங்களிடம் உள்ளது.

தற்போது அணியில் இருக்கும் வீரர்களுடனும், வரவிருக்கும் வீரர்களுடனும், கிரிக்கெட் நிர்வாகிகள் பொறுமை காக்க வேண்டும் எனவும் மலிங்கா கோரிக்கை விடுத்துள்ளார்.

இளம் வீரர்கள் தங்களால் முடியும் என்று நம்ப வேண்டும். அவர்கள் அர்ப்பணிப்புடன் இருக்க வேண்டும், அவர்கள் நடுத்தரத்திற்குச் செல்லும்போது தங்களைத் தாங்களே தீர்மானிக்கக் கூடிய அளவிற்கு வளர வேண்டும் என்று மலிங்கா கூறினார்.

டெஸ்ட் போட்டிகளில் இருந்து 2011 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற மலிங்கா, அடுத்த ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடைபெறும் டி 20 உலகக் கோப்பையில் விளையாடவுள்ளார், மேலும் அவர் டி 20 அணிக்கு தேர்வு செய்யப்படுவார் என்று இலங்கையின் கிரிக்கெட் வாரியம் உறுதிப்படுத்தியது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்