பாரசூட் ரெஜிமெண்டில் ராணுவப் பயிற்சியை தொடங்கிய டோனி!

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரர் டோனி, நேற்றைய தினம் முதல் ராணுவப் பயிற்சியை தொடங்கியுள்ளார்.

இந்திய ராணுவத்தில் கௌரவ லெப்டினண்ட் கர்னலாக இருக்கும் டோனி, ராணுவக் குழுவுடன் பயிற்சி மேற்கொள்ள அனுமதி கேட்டிருந்தார். அதனைத் தொடர்ந்து, ராணுவத் தளபதி பிபின் ராவத் பயிற்சி மேற்கொள்ள டோனிக்கு அனுமதி அளித்தார்.

இந்நிலையில், இந்திய ராணுவத்துடன் டோனி பயிற்சியில் இணைந்துள்ளார். காஷ்மீரில் உள்ள இந்திய ராணுவத்தின் பாராசூட் ரெஜிமெண்டில் நேற்று அவர் பயிற்சியை மேற்கொண்டார்.

இந்த பயிற்சியை அவர் 2 மாத காலம் மேற்கொள்வார் என்று தெரிகிறது. முன்னதாக, உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிந்தவுடன், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டோனி ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், அவர் இதுவரை தனது ஓய்வு முடிவை அறிவிக்கவில்லை. அத்துடன் யாரும் எதிர்பார்க்காத வகையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரை தவிர்த்து ராணுவ பயிற்சியை மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

NISSAR AHMAD

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்