பல பெண்களுடன் தொடர்பு: லீக் ஆன படங்களால் சர்ச்சையில் சிக்கிய பாகிஸ்தான் வீரர்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்
309Shares

பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரர் இமாம் உல் ஹக் பல பெண்களுடன் வாட்ஸ் ஆப்பில் சாட் செய்திருக்கும் புகைப்படங்கள் ட்விட்டரில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

கடந்த ஆண்டு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஷமி, பல பெண்களுடன் தொடர்பில் இருப்பதாக அவருடைய மனைவி ஹாசிம் ஜகான் பொலிசாரிடம் புகார் கொடுத்திருந்தார்.

ஆனால் அதற்கு ஷமி தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்த நிலையில், இளம்பெண் ஒருவர் தனக்கு ஷமி மெசேஜ் செய்திருக்கும் புகைப்படத்தை தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

இந்த வரிசையில் தற்போது பாகிஸ்தான் அணியின் துவக்க ஆட்டக்காரரும் இளம்வீரருமான இமாம் உல் ஹக், சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் பல பெண்களை ஏமாற்றி வாட்ஸ் ஆப்பில் பேசியிருக்கும் படங்களை, பெண் ஒருவர் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இவை அனைத்தும் தற்போது வைரலாக பரவி வருகின்றன. இதனை பார்த்த இணையதளவாசிகள் இமாமை கேலி செய்து வருகின்றனர்.


மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்