நடிகர் விஜய்சேதுபதி தன்னுடைய கதாபாத்திரத்தில் நடிப்பது பெருமையாக உள்ளதாக, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டின் ஜாம்பவான் வீரர் முத்தையா முரளிதரன். சர்வதேச அளவில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் (800) எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். அதேபோல் ஒருநாள் போட்டிகளிலும் 534 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் உள்ளார்.
இந்நிலையில், முரளிதரனின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாக உள்ளதாகவும், நடிகர் விஜய்சேதுபதி அவரது கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் செய்தி வெளியாகியது. இந்த படத்தினை ஸ்ரீபதி ரங்கசாமி என்பவர் இயக்குவதாக தற்போது கூறப்படுகிறது.
இதற்கிடையில், நடிகர் விஜய்சேதுபதி எனது கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது என்று முத்தையா முரளிதரன் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அவர் 800 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளதால், இந்த படத்திற்கு ‘800’ என பெயரிடப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்