இன்ஸ்டாகிராமில் கோஹ்லி ஒரு பதிவுக்கு எவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா?

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

இன்ஸ்டாகிராமில் ஸ்பான்சர் பதிவுகள் மூலம் பணம் ஈட்டும் விளையாட்டு வீரர்கள் வரிசையில் ஒரே ஒரு கிரிக்கெட் வீரராக இந்திய அணியின் விராட் கோஹ்லி இடம்பெற்றுள்ளார்.

இன்ஸ்டாகிராம் தளத்தில் ஸ்பான்சர்களின் பதிவுகளை பிரபலங்கள் தங்களின் கணக்குகளிலிருந்து பதிவிடுவதற்கு தொகை வசூலிப்பது வழக்கம்.

அந்தவகையில் அவர்கள் வசூலிக்கும் தொகை கணக்கின்படி, இன்ஸ்டாகிராமில் பணக்காரர்கள் யார் என்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின்படி விளையாட்டு வீரர்களில் ஸ்பான்சர் பதிவுகளுக்கு யார் அதிக பணம் சம்பாதிக்கின்றனர் என்ற பட்டியல் வெளியிடப்பட்டது.

இந்தப் பட்டியலில் உலகளவில் முதல் 10 இடங்களில் ஒரே ஒரு கிரிக்கெட் வீரர் மட்டுமே இடம்பெற்றுள்ளார்.

அந்த வீரர் இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் விராட் கோஹ்லி தான். விராட் கோஹ்லியின் இன்ஸ்டாகிராம் பக்கத்தை 38 கோடி பேர் பின் தொடர்ந்து வருகின்றனர்.

தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்பான்சர் தொடர்பாக ஒரு பதிவுக்கு விராட் கோஹ்லி 19,600 டொலர் வசூலிக்கிறார்.

உலகளவில் இவ்வாறு வருவாய் ஈட்டும் வீரர்கள் பட்டியலில் விராட் கோஹ்லி ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.

இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் போர்த்துகலின் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோ உள்ளார்.

அவர் தனது கணக்கிலிருந்து ஒரு ஸ்பான்சர் பதிவிற்கு 975,000 டொலர் வசூலிக்கிறார். இவருக்கு அடுத்தப் படியாக நெய்மார்(722,000 டொலர்), மெஸ்ஸி(648,00 டொலர்) ஆகிய வீரர்கள் உள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்