கில்..ரஹானே எங்கே..! இதெல்லாம் ஒரு அணியா? பிசிசிஐ-யை கடுமையாக விமர்சித்த கங்குலி

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கு இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ள விதம் குறித்து இந்திய முன்னாள் அணித்தலைவர் கங்குலி கடுமையாக விமர்சித்துள்ளார்.

கடந்த 21ம் தேதி இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை தேர்வாளர் எம்.எஸ்.கே பிரசாத், மேற்கிந்திய தீவுகள் சுற்றுப்பயணத்திற்கான ஒரு நாள், டி 20 மற்றும் டெஸ்ட் இந்திய அணியை அறிவித்தார்.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கங்குலி, இந்திய அணி தேர்வாளர்கள் அனைத்து விதமான போட்டிகளுக்கும் ஒரே வீரர்களை தேர்வு செய்யவேண்டிய நேரம் வந்துவிட்டது. அப்போதுதான் வீரர்களுக்குள் தன்னம்பிக்கையும் தொடர்ந்து சிறப்பாக ஆடும் திறனும் வளரும்.

ஒரு சிறந்த அணி என்பது அனைத்து விதமான போட்டிகளிலும் நிலையாக ஆடக்கூடிய வீரர்களைக் கொண்டு இருக்க வேண்டும். இது அனைவரையும் மகிழ்விப்பதைப் பற்றியது அல்ல, ஆனால், நாட்டிற்கு சிறந்ததைத் தேர்ந்தெடுப்பது மற்றும் நிலையாக இருப்பதான் என பிசிசிஐ-க்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

மற்றொரு ட்விட்டில், அணியில் பலர் இடம்பிடித்துள்ளனர், யார் அனைத்து விதமான போட்டிகளும் விளையாடுவார்கள். கில் அணியில் இடம்பெறாததும், ரஹானே ஒரு நாள் அணியில் இடம்பெறாததும் ஆச்சிரியமாக இருக்கிறது என விமர்சித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்