சிஎஸ்கே கேப்டன் மாற்றமா? வெளியான அதிகாரப்பூர்வ தகவல்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய நட்சத்திர வீரர் டோனி ஓய்வு பெறவுள்ளதாக தகவல்கள் பரவி வரும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனி விளையாடுவாரா? அணியின் கேப்டன் யார் என்பது குறித்து அணியின் தலைமை செயல் அதிகாரி தெரிவித்துள்ளார்.

அதிரடியான ஆட்டம் மற்றும் சிறப்பான தலைமை பண்பினால் கோடிக்கணக்கான ரசிகர்களின் மனங்களை வென்றவர் மகேந்திர சிங் டோனி, குறிப்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு, தமிழகத்தில் உட்பட தென்னிந்தியாவில் பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

டோனி ஓய்வு பெறவுள்ளதாக பரவி வரும் தகவல்களால், டோனி ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் விளையாடுவாரா என சென்னை ரசிகர்கள் கவலை அடைந்துள்ளனர்.இந்நிலையில், சென்னை விருகம்பக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் கிரிக்கெட் விளையாடும் மாணவர்களை ஊக்குவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் சிஎஸ்கே அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் டோனியின் ஒப்பந்தம் முடிய இன்னும் ஒரு ஆண்டு உள்ளது, அதுவரை அவரே கேப்டனாக தொடர்வார் எனவும், ஓய்வு குறித்து தோனி எதுவும் கூறவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers