இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்வது யார்?

Report Print Abisha in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளரை தேர்வு செய்யும் திட்டம் நடைமுறை படுத்தப்பட்டு வருகின்றது.

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கு தற்போது பல ஜாம்பவான்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் குறிப்பாக இலங்கை முன்னாள் வீரர் ஜயவர்தனே விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் இந்த பயிற்சியாளரை யார் தேர்வு செய்வது என்ற குழப்பம் தற்போது நீடித்து வருகின்றது. வழக்கமாக தேர்வு குழுவில் சச்சின், கங்குலி,வி.வி. எஸ்.லக்ஷ்மணன் ஆகியோர் இருப்பார்கள். இதில், சச்சின் கங்குலி உள்ளிடோர் மீது இரட்டை ஆதாய பிரச்சனை இருந்து வருவதால் அவர்கள் தேர்வு செய்ய வாய்ப்பில்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றனர்.

பதிலாக மகளீர் கிரிகெட் அணியின் தேர்வு குழுவான கபில் தேவ் தலமையிலான குழு தேர்வு செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இருந்தாலும், உச்சநீதிமன்ற விசாரணைக்கு பிறகே யார் தலமையிலான குழு தேர்வு செய்யும் என்பது தெரியவரும்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers