நான் மீண்டும் விளையாடுவதற்கு அவர் தான் காரணம்: மனம் திறந்த பென் ஸ்டோக்ஸ்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

உலகக்கோப்பை இறுதி போட்டியில் நட்சத்திர வீரராக ஜொலித்த இங்கிலாந்து அணியின் பென் ஸ்டோக்ஸ், வெற்றியை தன்னுடைய மனைவிக்கு காணிக்கையாக்குவதாக தெரிவித்துள்ளார்.

நியூசிலாந்து அணிக்கெதிராக நடைபெற்ற உலகக்கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில், இங்கிலாந்து அணியை சேர்ந்த பென் ஸ்டோக்ஸ் இறுதி வரை போராடி அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

2017ம் ஆண்டு செப்டம்பர் மாதம் பிரிஸ்டல் நகரில் உள்ள ஒரு பாருக்கு வெளியே இரவு நேரத்தில் நடைபெற்ற சண்டையில், சக நபர்களை பென் ஸ்டோக்ஸ் கடுமையாக தாக்கியிருந்தார்.

இதனையடுத்து கைது செய்யப்பட்ட அவர் மறுநாள் விடுவிக்கப்பட்டார். இந்த சம்பவமானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பென் ஸ்டோக்ஸ்க்கு எதிர்ப்பலை கிளம்பியது.

இந்த வழக்கானது நீதிமன்றத்தில் நடைபெற்ற சமயத்தில் தான், கிளேர் ராட்க்ளிஃப் என்பவரை திருமணம் செய்தார்.

இந்த நிலையில் "குட் மார்னிங் பிரிட்டன்" நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இங்கிலாந்து அணியின் நட்சத்திரம் பென் ஸ்டோக்ஸ் இதுகுறித்து பேசுகையில், அந்த சம்பவத்திற்கு பின்னர் ஏறக்குறைய என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என நான் நினைத்தேன்.

ஆனால் என்னுடைய மனைவியும், குடும்பத்தினரும் தான் எனக்கு அதிக ஊக்கம் கொடுத்தனர். அதிக மன உளைச்சலில் இருந்த காலத்தில் என் மனைவி தான் எனக்கு உதவினார். நிச்சயமாக என்னால் அதனை தனியாக செய்திருக்க முடியாது. அதனால் என் மனைவிக்கு தான் இந்த வெற்றியை காணிக்கையாக்குகிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...