கிரிக்கெட் போதும்.. ஓய்வு பெற்று விடு மகனே.! டோனிக்கு பெற்றோர் அன்புக் கட்டளை

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இந்தியா நட்சத்திர வீரர் டோனி, சமீப காலமாக பல விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். இது அவருக்கு புதிதும் அல்ல. எனினும், விரைவில் அவரின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வரும் என பலர் யூகித்து வருகின்றனர்.

இந்நிலையில், டோனி டி20 உலகக் கோப்பைக்கு பிறகு ஓய்வு பெற வேண்டும் என அவரது குழந்தை பருவ பயிற்சியாளர் கேசவ் பானர்ஜி கூறியுள்ளார். அதே சமயம், தற்போதே டோனி கிரிக்கெட்டிலிருந்து விலக வேண்டும் என அவரது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பேட்டியளித்த டோனியின் குழந்தை பருவ பயிற்சியாளர் கேசவ் பானர்ஜி கூறியதாவது, கடந்த ஞாயிற்றுக்கிழமை டோனியின் வீட்டிற்கு சென்று பெற்றோர்களுடன் உரையாடினேன்.

டோனி தற்போது கிரிக்கெட்டிலிருந்து விலக வேண்டும் என அவர்கள் கூறினார்கள். நான் அவர் விலகக்கூடாது என சொன்னேன். அவர் இன்னும் ஒரு ஆண்டு விளையாட வேண்டும். டி20 உலகக் கோப்பை பின் அவர் ஓய்வு பெற்றால் சிறப்பாக இருக்கும் என குறிப்பிட்டேன்.

இல்லை இந்த வீட்டை யார் கவனித்துக் கொள்வார்கள் என்று கூறி அவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நீண்ட காலமாக நீங்கள் வீட்டை கவனித்துக்கொண்டு வருகிறீர்கள், இன்னும் ஒரு வருடம் காத்திருங்கள் என பெற்றோரிடம் கூறியதாக டோனியின் குழந்தை பருவ பயிற்சியாளர் கேசவ் பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்