சிறப்பாக விளையாடியும் தோற்ற நியூசிலாந்து.. தோல்விக்கு பின் அந்நாட்டு ரசிகர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

உலகக்கோப்பை இறுதி போட்டியில் நியூசிலாந்து தோல்வியடைந்தது அந்நாட்டு ரசிகர்களை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

2019-ஆம் ஆண்டு உலகக்கோப்பை இறுதி போட்டியில் நியூசிலாந்து - இங்கிலாந்து அணிகள் மோதியது.

இதில் சூப்பர் ஓவரில் அதிக பவுண்டரிகள் அடித்த அணி என்ற அடிப்படையில் இங்கிலாந்து வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

மிக சிறப்பாக விளையாடியும் வினோத கிரிக்கெட் விதியால் நியூசிலாந்து தோல்வியடைந்தது அந்நாட்டு ரசிகர்கள் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து தோற்றவுடன் அந்நாட்டு ரசிகர்கள் பலர் தொலைக்காட்சியை அணைத்து விட்டு கனத்த மனதுடன் தங்கள் பணிக்கு சென்றனர்.

இன்னும் பலர் நியூசிலாந்து எப்படி தோற்றது என்பது குறித்து விவாதித்து வருகிறார்கள்.

விரக்தியில் இருந்த ஒரு ரசிகர் கூறுகையில், ஒரு அணி பூஜ்ஜியம் ரன்கள் வித்தியாசத்தில் தோற்பது எப்படி சாத்தியமாகும் என கேள்வியெழுப்பியுள்ளார்.

அதே போல நியூசிலாந்து அணியின் முன்னாள் வீரர் ஸ்காட் ஸ்டைரீஸ், ஐசிசி ஒரு ஜோக் என கடுமையாக விமர்சித்துள்ளார்

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers