ஓய்வு பற்றி சிந்திக்க வேண்டாம் டோனி! புகழ்வாய்ந்த பெண் உருக்கமான கோரிக்கை

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டோனி ஓய்வு பெறுவார் என செய்திகள் பரவும் நிலையில் பிரபல பாடகி லதா மங்கேஷ்கர் அவரிடம் உருக்கமான கோரிக்கை வைத்துள்ளார்.

இந்தியா - நியூசிலாந்து இடையிலான அரையிறுதி ஆட்டத்தில் இந்தியா 18 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்து உலகக்கோப்பை தொடரிலிருந்து வெளியேறியது.

இப்போட்டியில் இந்திய வீரர் டோனி கடைசி வரை நின்று வெற்றிக்காக போராடினார். ஆனால் 50 ரன்கள் எடுத்த நிலையில் துரதிருஷ்டவசமாக ரன்அவுட் ஆனார்.

இந்தியா வெளியேறியதால் டோனி ஓய்வு முடிவை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்நிலையில் புகழ் வாய்ந்த பாடகி லதா மங்கேஷ்கர் உணர்ச்சிப்பூர்வமான மெசேஜ் ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

அதில், நீங்கள் ஓய்வு பெற விரும்புகிறீர்கள் என்ற செய்தியை கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.

தயவு செய்து அதுபோன்ற எண்ணம் வேண்டாம். நாட்டிற்கு நீங்கள் தேவை. ஓய்வு முடிவு பற்றி சிந்திக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்