டோனியை ஏன் விளையாட அனுப்பல? ரவி சாஸ்திரியிடம் கோபத்தில் கொந்தளித்த கோஹ்லி: கசிந்தது வீடியோ

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி, அணியின் பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் கோபப்படும் காட்சி இணையத்தில் வைரலாகியுள்ளது.

நேற்று நியூசிலாந்திற்கு எதிரான அரையிறுதிப் போட்டியில், இந்திய அணி போராடி தோல்வியடைந்தது. ஆரம்ப துடுப்பாட்டகாரர்களான ரோகித், ராகுல், விராட் தலா 1 ஓட்டங்களில் வெளியேறினர்.

இந்தியாவின் இரண்டாவது விக்கெட் கோஹ்லி அவுட் ஆன உடன், எதிர்பாராத விதமாக இளம் வீரர் ரிஷப் பந்த களமிறங்கினார். இதனையடுத்து, தினேஷ் கார்த்திக் அவுட் ஆன உடன் அனைவரும் டோனி களமிறங்குவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பாண்டிய இறங்கினார்.

பந்த் அவுட் ஆன உடன், ஆடை மாற்றம் அறையில் இருந்த கோஹ்லி, கோபமடைந்து, பயிற்சியாளர் ரவி சாஸ்திரியிடம் கொந்தளித்தார். டோனிக்கு பதில் பாண்டியாவை இறக்கியதற்காக கோஹ்லி கோபப்பட்டதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து, 7வது வீரராக டோனி களமிறங்க, அவருடன் ஜோடி சேர்ந்த ஜடேஜா இறுதி வரை வெற்றிக்காக போராடினார்கள்.

இந்நிலையில், தினேஷ் கார்த்திக் அவுட் ஆன உடன் ஏன் அனுபவமிக்க வீரர் டோனியை இறக்கவில்லை என கேள்வி எழுந்துள்ளது. அவர் இறங்கி இருந்தால், ரிஷப் பந்தை சிறப்பாக வழிநடத்தி, போட்டியின் முடிவை மாற்றி இருப்பார் என இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் கங்குலி மற்றும் விவிஎஸ் லக்ஷ்மண் கருத்து தெரிவித்துள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...