தன்னை மோசமாக கிண்டல் செய்த நெட்டிசன்கள்.. ஐஸ்வர்யா ராயின் புகைப்படத்துடன் பகிர்ந்த முன்னாள் இங்கிலாந்து வீரர்!

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்
387Shares

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், தன்னை மோசமாக கிண்டல் செய்த புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்தது வைரலாகி வருகிறது.

சமீபத்தில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன், புல் ஷாட் விளையாட முயற்சிப்பதை மோசமாக விமர்சிக்கும் புகைப்படம், வெவ்வேறு காட்சிகளில் போட்டோஷாப் செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.

இதனை கவனித்த பீட்டர்சன், தனக்கு பிடித்த சில புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் தான் பேட்டிங் செய்யும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்து, அதன் கீழ் ‘இது நேற்றிலிருந்து அனைத்து தலைப்பு செய்திகளையும் கைப்பற்றும். நான் கூட கூறவில்லை. ஆனால் இது நடக்கும்! எல்லோரும் இதைப் பற்றி பேசுவார்கள் - இது என் தொழிலின் கதை’ என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர் பகிர்ந்த மற்றொரு பதிவு அனைவரின் கவனத்தையும் வெகுவாக ஈர்த்துள்ளது. அதாவது, ஐஸ்வர்யா ராய் மற்றும் மாதுரி தீட்சித் நடனமாடும் புகைப்படத்துடன் பீட்டர்சன் பேட்டிங் செய்யும் புகைப்படமும் சேர்த்து போட்டோஷாப் செய்யப்பட்டுள்ளது.

இந்த புகைப்படம் சுமார் ஒரு லட்சம் லைக்ஸ் மற்றும் ஆயிரக்கணக்கான கமெண்ட்களையும் பெற்றுள்ளது. அத்துடன் டிரம்ப்புடன், தான் இருக்கும் போட்டோஷாப் புகைப்படம் ஒன்றையும் பகிர்ந்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்