லீக்கில் இங்கிலாந்து பக்கம்.. இறுதிப்போட்டியில் இந்தியா பக்கம்! ரவி சாஸ்திரியின் நம்பிக்கை

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்
133Shares

உலகக் கோப்பை லீக் போட்டியின் போது கடவுள் இங்கிலாந்து பக்கம் இருந்ததாகவும், இறுதிப்போட்டியில் மீண்டும் இரு அணிகள் மோதினால், கடவுள் இந்தியா பக்கம் இருப்பார் என இந்திய அணியின் தலைமை பயிற்சியாளர் ரவி சாஸ்திரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

முதல் அரையிறுதியில் ஒருவேளை, நியூசிலாந்து அணியை இந்தியா வென்றால், அவுஸ்திரேலியா-இங்கிலாந்து மோதும் இரண்டாவது அரையிறுதியில் வெற்றிப்பெறும் அணியுடன் இறுதிப்போட்டியில் இந்தியா மோதும்.

இந்நிலையில் ரவி சாஸ்திரி அளித்த பேட்டியில் கூறியதாவது, இந்தியா-இங்கிலாந்து மோதிய லீக் போட்டியின் போது கடவுள் இங்கிலாந்து பக்கம் இருந்தார். ஒருவேளை இறுதிப்போட்டியில் இரு அணிகளும் மோதினால் கடவுள் இந்தியா பக்கம் இருப்பார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ரோகித் சர்மாவை புகழ்ந்த ரவி சாஸ்திரி, சிறந்த வீரர்கள் ஒருவர் என ரோகித்தை குறிப்பிட்டார். ரோகித்து ஆட்டம் இந்தியாவிற்கு கைகொடுத்துள்ளது. தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக ரோகித் அடித்த சதம் அவருடைய சிறந்த துடுப்பாட்டத்தில் ஒன்று என ரவி சாஸ்திரி புகழ்ந்தள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்