இந்திய அணி வேண்டுமென்றே அப்படி செய்யவில்லை.. பாகிஸ்தான் அணி தலைவர் ஆதரவு

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இங்கிலாந்து அணியிடம் இந்தியா வேண்டுமென்றே தோற்கவில்லை என பாகிஸ்தான் அணியின் தலைவர் சர்ப்ராஸ் அகமது கருத்து தெரிவித்துள்ளார்.

உலகக்கிண்ணம் தொடரில் கடந்த 30ம் திகதியன்று நடைபெற்ற போட்டியில் இங்கிலாந்து அணியிடம் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் தேல்வி அடைந்தது.

பாகிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பை சிதைக்கும் வகையில் இந்திய அணி வேண்டுமென்றே இந்த ஆட்டத்தில் தோற்றதாக பாகிஸ்தான் முன்னாள் வீரர் வக்கார் யூனிஸ் கருத்து தெரிவித்து இருந்தார்.

இந்த கருத்தானது பாகிஸ்தான் ரசிகர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வந்த நிலையில், நேற்று நாடு திரும்பிய பாகிஸ்தான் அணியின் கேப்டன் சர்ப்ராஸ் அகமது, ‘நாங்கள் அரையிறுதி வாய்ப்பில் நீடிக்கக்கூடாது என்பதற்காக இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோற்றதாக நான் நினைக்கவில்லை. அப்படி சொல்வது சரியானது அல்ல. இங்கிலாந்து அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது’ என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக உலகக்கிண்ணம் தொடரில் ஐந்து வெற்றிகளையும் நியூசிலாந்து அணிக்கு நிகராக 11 புள்ளிகளையும் பெற்றும் கூட பாகிஸ்தான் அணியால் அரையிறுதிக்கு முன்னேற முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers