டோனிக்கு பிறந்தநாள் வாழ்த்து..! ரோகித்தின் வேடிக்கையான பதில்: சிரிப்பலையில் செய்தியாளர்கள்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

டோனியின் பிறந்தநாள் குறித்து செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு ரோகித் சர்மா வேடிக்கையாக பதிலளித்து அனைவரையும் சிரிப்பலையில் ஆழத்தினார்.

யூலை 7 இன்று இந்திய நட்சத்திர வீரர் டோனி தனது 38வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். சமூக வலைதளங்களில் அவருக்கு வாழ்த்து மழை பொழிகிறது.

இந்நிலையில், நேற்று இலங்கையுடனான வெற்றிக்கு பின்னர், இந்திய வீரர் ரோகித் சர்மா செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துக்கொண்டார். அப்போது, அவரிடம் டோனி பிறந்தநாள் திட்டம் குறித்து கேள்விக் கேட்கப்பட்டது.

இதற்கு பதிலளித்த ரோகித், நான் என்ன சொல்வது, இது அவருடைய பிறந்தநாள். பிறந்தநாள் அன்று நாம் என்ன சொல்வோம்? ஹப்பி பர்த்டே.

எங்களுக்கு நாளை பயண நாள் உள்ளது, நாங்கள் பர்மிங்காம் அல்லது மான்செஸ்டருக்குப் போகிறோமா என்று தெரியவில்லை, எனவே கேக் வெட்டுதல் பஸ்ஸில் இருக்கும். உங்களுக்கு புகைப்படத்தை அனுப்புகிறேன் என ரோகித் வேடிக்கையாக பதில் அளிக்க, அங்கிருந்த செய்தியாளர்கள் அனைவரும் சிரித்து மகிழ்ந்தனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers