டோனியுடன் பாண்ட்யா எடுத்த செல்பியில் மர்மம்.. கதறும் நெட்டிசன்கள்

Report Print Basu in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய நட்சத்திர வீரர் ஹர்திக் பாண்ட்யா, வெளிட்ட டோனி உட்பட அணி வீரர்களுடன் இருக்கும் புகைப்படம் இணையத்தில் பயங்கர வைரலாகியுள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு இந்திய அணி முன்னேறியது.இந்நிலையில் கடந்த 4ம் திகதி, பாண்ட்யா, டோனி, பும்ரா, ரிஷப் பந்த், மயங்க் அகர்வால் ஆகியோர் வெளியே சென்றுள்ளனர்.

அணி வீரர்களுடன் செல்பி எடுத்த பாண்ட்யா, அதை தனது ட்விட்டர் பக்கத்தில வெளியிட்டார். குறித்த புகைப்படம் பயங்கர வைரலாகியுள்ளது.அதற்கு காரணம் அந்த புகைப்படத்தில் உள்ள மர்ம கை தான். புகைப்படத்தில் ரஷப் பந்த் தோளில் இருக்கும் மர்ம கை யாருடையது என்பது தான்.

மரம் கையால் குழப்பமடைந்த நெட்டிசன்கள், அந்த கை யாருடையது என்ற கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால், தற்போது, வரை இந்த கேள்விக்கு பதில் கிடைக்கவில்லை. புகைப்படத்தை பதிவிட்ட ஹர்திக் பாண்ட்யாவால் மட்டுமே இந்த குழப்பத்தை தீர்க்க முடியும் என பலர் கூறிவருகின்றனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers