ஓய்வு பெறுவது எப்போது? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த டோனியின் பதில்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் டோனி தன்னுடைய ஓய்வு குறித்து தனியார் தொலைக்காட்சியிடம் கூறியுள்ளார்.

இந்திய அணி வருகின்ற சனிக்கிழமையன்று உலகக்கிண்ணம் தொடரின் கடைசி லீக் போட்டியில் இலங்கை அணியை எதிர்கொள்ள உள்ளது.

தனது 4 வது உலகக் கோப்பையில் விளையாடும் மூத்த விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோனியின் எதிர்காலம் குறித்த ஊகங்கள், போட்டிகள் தொடங்கியதிலிருந்து பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

அவர் தனது கடைசி போட்டியுடன் ஓய்வு பெறலாம் என சில நிபுணர்கள் கணித்திருந்தாலும், வேறு சிலர் உலகக்கிண்ணம் போட்டிக்கு பின்னரும் கூட அவர் தொடரலாம் என கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் ஏபிபி ஊடக நிறுவரின் கேள்விக்கு பதிலளித்துள்ள டோனி, "நான் எப்போது ஓய்வு பெறுவேன் என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் நாளைய விளையாட்டுக்கு முன்பு நான் ஓய்வு பெற வேண்டும் என்று நிறைய பேர் விரும்புகிறார்கள்," என கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers