பிரையன் லாராவுக்கு நெஞ்சுவலி? திடீரென மருத்துவமனையில் அனுமதி! வெளியான தகவல்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் பிரையன் லாரா, மருத்துவமனையில் திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் மும்பை பரேலில் உள்ள தனியார் மருத்துவமனையில், பிரையன் லாரா திடீரென அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஏஜென்சி வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

இது தொடர்பாக எந்த தகவல்களையும் மருத்துவமனை அதிகாரிகள் பகிர்ந்து கொள்ளவில்லை. எனினும், லாராவுக்கு சில பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

லாரா தங்கியிருந்த விடுதிக்கு அருகில், நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. அந்நிகழ்ச்சியில் பங்கேற்க வந்திருந்த போது அவருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

GETTY IMAGES

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers