உலக கிரிக்கெட்டின் புதிய டோனி இவர்: இங்கிலாந்து வீரரை புகழும் அவுஸ்திரேலிய பயிற்சியாளர்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

உலக கிரிக்கெட்டின் புதிய டோனியாக இங்கிலாந்து விக்கெட் கீப்பர் ஜோஸ் பட்லர் இருப்பார் என அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளர் ஜஸ்டின் லாங்கர் கூறியுள்ளார்.

இங்கிலாந்து - அவுஸ்திரேலிய அணிகள் மோதும் உலகக்கிண்ணம் போட்டியானது, இன்று லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ளது.

ரசிகர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் போட்டி குறித்து, அவுஸ்திரேலிய அணியின் பயிற்சியாளரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான ஜஸ்டின் லாங்கர் செய்தியாளர்களிடம் பேசியுள்ளார்.

அப்போது பேசிய அவர், விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனாக இங்கிலாந்து அணியின் ஜோஸ் பட்லர் சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

அவருடைய பேட்டிங் எனக்கு மிகவும் பிடிக்கும். சர்வதேச கிரிக்கெட்டில் ஆட்டத்தை முடித்து வைப்பதில் சிறந்தவராகக் கருதப்படும் முன்னாள் இந்திய கேப்டன் தோனியை, அவர் மிஞ்ச வாய்ப்புள்ளது எனக்கூறியுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers