அந்த தோல்விக்கு பின் தற்கொலை செய்துகொள்ள தோன்றியது! பாகிஸ்தான் பயிற்சியாளர்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியிடம் உலகக்கோப்பை போட்டியில் பாகிஸ்தான் தோல்வியுற்றவுடன், தனக்கு இருந்த மன அழுத்தத்தினால் தற்கொலை செய்து கொள்ளலாம் என தோன்றியதாக பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரின் லீக் ஆட்டத்தில், கடந்த ஜுன் 16ஆம் திகதி இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் மழை காரணமாக டக்வொர்த் லூயிஸ் விதிப்படி பாகிஸ்தான் அணியை 89 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வென்றது.

இந்தத் தோல்விக்குப் பின் பாகிஸ்தான் வீரர்களை, அந்நாட்டு ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கடுமையாக விளாசினர். சிலரது மோசமான விமர்சனங்களால் பாகிஸ்தான் வீரர்கள் மனவேதனை அடைந்தனர்.

AFP

இந்நிலையில் ஊடகங்களுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளர் மிக்கி ஆர்த்தர், இந்தியாவுக்கு எதிரான ஆட்டத்தில் தோல்வியுற்றபோது தனக்கு மிகுந்த மன அழுத்தம் ஏற்பட்டதாக தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் கூறுகையில், ‘உலகக்கோப்பை போட்டியில் இந்தியாவுக்கு எதிரான லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் தோற்றபோது எனக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. எனக்கு அந்த அளவுக்கு அழுத்தங்கள் வந்தன.

இந்த அழுத்தங்களை சமாளிக்க முடியாமல், கடந்த ஞாயிற்றுக்கிழமை நான் தற்கொலை செய்து கொள்ளலாமா என்று கூட எனக்கு தோன்றியது. ஆனால், இது ஒருபோட்டி தானே இன்னும் அதிகமான போட்டிகள் இருக்கின்றதே என்று தோன்றியது.

AFP

ஒரு போட்டியில் நீங்கள் தோல்வி அடையலாம். ஆனால், அடுத்த போட்டியில் நீங்கள் வெற்றி பெற்றுவிட முடியும். இது உலகக்கோப்பை என்று மனதுக்குள் தேற்றிக் கொண்டேன்.

அதுமட்டுமல்லாமல் ஊடகத்தின் பேச்சுகள், ரசிகர்களின் எதிர்பார்ப்புகள் ஆகியவற்றால், வேறு வழியின்றி நாங்கள் வெற்றி பெற்றே தீர வேண்டிய நிலைக்கு சென்று, தென் ஆப்பிரிக்காவை வீழ்த்தினோம்.

எங்களால் எந்த அணியையும் வெல்ல முடியும் எனும் நம்பிக்கை இருக்கிறது. நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், வங்கதேசம் என அனைத்து அணிகளையும் வீழ்த்துவோம். இங்கிலாந்துக்கு அதிர்ச்சி அளித்ததைப் போல் வெல்வோம். பந்துவீச்சு, பீல்டிங், பேட்டிங் மூன்று துறைகளிலும் எங்களின் சிறந்த செயல்பாட்டை வெளிப்படுத்துவோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers