வெறுப்பின் உச்சத்திற்கு சென்ற பாகிஸ்தான் ரசிகர் செய்த செயல்!

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் தோல்விக்கு பிறகு, அந்நாட்டு ரசிகர் ஒருவர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

உலகக்கோப்பை தொடரில், இந்திய அணிக்கு எதிராக நடந்த போட்டியில் பாகிஸ்தான் அணி தோல்வியை சந்தித்தது. இந்திய அணியிடம் உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணி சந்திக்கும் 7வது தோல்வி இதுவாகும்.

இதனால் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் மிகுந்த வெறுப்படைந்தனர். அத்துடன் சமூக வலைதளங்களில் பாகிஸ்தான் அணியை விளாசி வருகின்றனர்.

பாகிஸ்தான் அணிக்கு எஞ்சிய 4 போட்டிகளில் வெற்றி பெற்றால் மட்டுமே, அரையிறுதி சுற்றை எட்ட முடியும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவும் தங்கள் அணி மீதான கோபத்தை சமூக வலைதளங்களில் வீடியோவாக பாகிஸ்தான் ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.

இந்நிலையில், பாகிஸ்தான் அணியின் ரசிகர் ஒருவர் கோபத்தின் உச்சத்திற்கே சென்றுள்ளார். அதாவது, பாகிஸ்தான் கிரிக்கெட் அணியை தடை செய்ய வேண்டும் என்றும், பாகிஸ்தான் அணிக்கு வீரர்களை நியமிக்கும் இன்சமாம் உல் ஹக் தலைமையிலான கிரிக்கெட் கவுன்சிலை கலைக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுவை பரிசீலித்த நீதிபதி, இது தொடர்பாக பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாக அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பியுள்ளதாக தெரிய வந்துள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்