எங்கள் வெற்றிக்கு அதுதான் திருப்புமுனையாக இருந்தது: விராட் கோஹ்லி

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

ஒரே ஓவரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியது திருப்புமுனையாக அமைந்தது என, அவுஸ்திரேலிய அணிக்கு எதிராக வெற்றி பெற்றது குறித்து விராட் கோஹ்லி கருத்து தெரிவித்துள்ளார்.

லண்டனில் நேற்று நடந்த உலகக்கோப்பை லீக் போட்டியில், இந்திய கிரிக்கெட் அணி 36 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது. இந்திய அணி தரப்பில் ஷிகர் தவான் 117 ஓட்டங்களும், விராட் கோஹ்லி 82 ஓட்டங்களும் விளாசினர்.

தொடக்க ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய இந்திய அணிக்கு இது இரண்டாவது வெற்றி ஆகும். இந்நிலையில், அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது குறித்து இந்திய அணித்தலைவர் விராட் கோஹ்லி கூறுகையில்,

‘இந்திய வீரர்கள் அனைவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். துடுப்பாட்ட வீரர்களும், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினோம். ஹர்திக் பாண்ட்யாவின் அதிரடியான ஆட்டம் அற்புதமாக இருந்தது. நாங்கள் 30 ஓட்டங்கள் கூடுதலாகவே எடுத்தது அதிர்ஷ்டம் தான்.

AFP

முதல் 3 நிலை துடுப்பாட்ட வீரர்கள் சதம் அடிக்கும்போது, அதிரடி வீரர் ஹர்திக் பாண்ட்யாவை முன்னதாக களம் இறக்குவது என்பதை முடிவு செய்து வைத்து இருந்தோம். ஆடுகளத்தின் தன்மை மற்றும் சூழ்நிலைக்கு தகுந்தவாறு தான் முகமது ஷமிக்கு வாய்ப்பு கொடுக்கவில்லை.

புவனேஷ்வர்குமார் சாம்பியன் பந்துவீச்சாளர் ஆவார். அவர் புதிய பந்திலும், பழைய பந்திலும் நேர்த்தியாக வீசக்கூடியவர். ஒரே ஓவரில் சுமித்தையும், ஸ்டோனிசையும் வீழ்த்தினார். இந்த இருவரும் அனுபவம் வாய்ந்தவர்கள். அவுஸ்திரேலியாவை வீழ்த்தியது மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்