மைதானத்தில் கேலி செய்த ரசிகர்கள்... விராட்கோஹ்லி செயலை பார்த்து புகழும் இணையதளவாசிகள்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

அவுஸ்திரேலிய வீரர் ஸ்மித்திற்கு ஆதரவாக மைதானத்தில் இருந்த ரசிகர்களிடம், இந்திய அணியின் கேப்டன் விராட்கோஹ்லி கோரிக்கை வைத்திருக்கும் செயலை இணையதளவாசிகள் பாராட்டி வருகின்றனர்.

இந்திய - அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற உலகக்கிண்ணம் போட்டியில் இந்திய அணி, 36 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியின் போது பவுண்டரி எல்லையில் நின்றுகொண்டிருந்த அவுஸ்திரேலிய வீரர் ஸ்மித்தை, "ஏமாற்றுக்காரன்" என அங்கிருந்த ரசிகர்கள் கேலி செய்ய ஆரம்பித்தனர்.

இதனை பார்த்த விராட்கோஹ்லி உடனடியாக ஓடிவந்து அவரை அப்படி அழைக்க வேண்டாம். விளையாடுவதை ஊக்குவியுங்கள் என சைகையில் கேட்டுக்கொண்டார்.

விராட்கோஹ்லியின் இந்த செயலை தற்போது இணையதளவாசிகள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

இதுகுறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய விராட், அந்த கூட்டத்தில் இருந்தவர்கள் சார்பாக நான் ஸ்மித்திடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அவருடைய மனநிலையை என்னால் உணர முடிகிறது. இதற்கு முன்பு நடந்த சில போட்டிகளில் கூட இது நடந்ததை நான் பார்த்தேன். என் கருத்துப்படி இது ஏற்கத்தக்கதல்ல.

நீண்ட நாட்களுக்கு முன்பு அது நடந்தது. தற்போது அவர் அணிக்கு திரும்பி சிறப்பாக விளையாட முயற்சித்து வருகிறார்.

ஒருவரை இப்படி கீழே இறக்கி வைத்து பார்ப்பது நல்லதல்ல என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்