டோனியின் கையுறை சர்ச்சை.. பிசிசிஐ-யின் கோரிக்கையை நிராகரித்த ஐசிசி!

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் விக்கெட் கீப்பர் டோனி, பலிதான் முத்திரை கொண்ட கையுறை அணிந்திருந்த விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியதை தொடர்ந்து, அந்த முத்திரையை அகற்ற வேண்டும் என்று ஐ.சி.சி திட்டவட்டமாக பி.சி.சி.ஐ-யிடம் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

கடந்த 5ஆம் திகதி இந்தியா-தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான லீக் ஆட்டம் நடந்தது. அப்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டோனி, கையில் அணிந்திருந்த கையுறையில் ராணுவத்தில் ஒரு பிரிவான பலிதான் ரெஜிமெண்டின் முத்திரையை கையுறையில் அணிந்திருந்தார்.

இந்தக் காட்சி கமிராவில் Zoom செய்யப்பட்டு, டோனியின் கையுறையில் ராணுவ பலிதான் பிரிவு முத்திரை இருப்பது காட்டப்பட்டது. இதனைப் பார்த்த டோனியின் ரசிகர்கள் பலரும் அவருக்கு நாட்டுப்பற்று இருப்பதாக புகழ்ந்த நிலையில், மறுபுறம் சர்வதேச போட்டியில் ஒருநாட்டின் ராணுவ முத்திரையைப் பதித்து விளையாடுவதை ஐ.சி.சி விரும்பவில்லை.

அதனைத் தொடர்ந்து, டோனியின் கையுறையில் இருக்கும் முத்திரையை நீக்குமாறு பி.சி.சி.ஐ அமைப்புக்கும், டோனிக்கும் ஐ.சி.சி அறிவுரை வழங்கியது. அதன் பின்னர், இதுகுறித்து பேசிய உச்ச நீதிமன்றத்தினால் நியமிக்கப்பட்ட நிர்வாகிகள் குழுவின் தலைவர் வினோத் ராய் கூறுகையில்,

டோனி கையுறையில் இருக்கும் முத்திரை வர்த்தக ரீதியாகவோ அல்லது மதரீதியாகவோ இருக்கும் அடையாளம் அல்ல. இதுதொடர்பாக ஐ.சி.சியிடம் அனுமதி கோரி பேசி வருகிறோம் என தெரிவித்தார். ஆனால், பி.சி.சி.ஐயின் இந்த விளக்கத்தை ஐ.சி.சி ஏற்கவில்லை.

அத்துடன், உடனடியாக டோனி தனது கையுறையில் இருக்கும் முத்திரையை நீக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து ஐ.சி.சி வெளியிட்ட அறிக்கையில், ‘உலகக்கோப்பை போட்டியில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய அணி வீரர் டோனி தனது கையுறையில் அணிந்திருந்த முத்திரைக்கு ஐ.சி.சி சார்பில் அனுமதி அளிக்கப்படவில்லை.

ஐ.சி.சி விதிமுறைகளின்படி எந்த ஒரு வீரரும், எந்த தனிப்பட்ட செய்தியையோ அல்லது எந்த விதமான பொருட்கள் கருவிகள் குறித்த முத்திரைகளையோ பதிக்க ஐ.சி.சி அனுமதியளிக்காது. அதுமட்டுமல்லாமல் ஐ.சி.சி விதிமுறைகளின்படி டோனி தனது கையுறையில் இருக்கும் முத்திரை விதிமுறை மீறியதாகும். அதை உடனே நீக்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers