டோனி என்ன போர் புரியவா போயிருக்கிறார்? முட்டாள்கள்! பாகிஸ்தான் அமைச்சர் ஆவேசம்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

டோனி என்ன மகாபாரதப் போருக்கா போயிருக்கிறார் என்று பாகிஸ்தான் அமைச்சர் ஆவேசமாக கேள்வி எழுப்பியுள்ளார்.

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உலகக்கோப்பை லீக் போட்டியில், இந்திய அணியின் விக்கெட் கீப்பர் டோனி தனது கையில் அணிந்திருந்த கையுறையில், ராணுவத்தில் ஒரு பிரிவான பலிதான் ரெஜிமென்டின் முத்திரை இருந்தது.

இக்காட்சி கமிராவில் Zoom செய்யப்பட்டு, டோனியின் கையுறையில் ராணுவ பலிதான் பிரிவு முத்திரை இருப்பது காட்டப்பட்டது. இதனைப் பார்த்த ரசிகர்கள், டோனியின் நாட்டுப்பற்றை புகழ்ந்துள்ளனர்.

மேலும், சமூக ஊடகங்களில் அவரை பாராட்டி வரும் பலரும், குறித்த முத்திரை படத்தை வைரலாக்கி வருகின்றனர். எனினும், ஐ.சி.சி நடத்தும் உலகக்கோப்பை போட்டியில் ஒரு நாட்டின் ராணுவ முத்திரையைப் பதித்து விளையாடுவதை விரும்பவில்லை.

எனவே, டோனியின் கையுறையில் இருக்கும் முத்திரையை நீக்குமாறு பி.சி.சி.ஐ அமைப்புக்கும், டோனிக்கும் ஐ.சி.சி அறிவுரை வழங்கியது.

AFP

இந்நிலையில், பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் அமைச்சரவையில், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருக்கும் பாவத் சவுத்ரி, கையுறை அணிந்த டோனியின் செயலுக்கு பாராட்டு தெரிவிக்கும் ஊடகங்கள் மீது கடும் விமர்சனம் வைத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘இங்கிலாந்துக்கு டோனி கிரிக்கெட் விளையாடத்தான் போயிருக்கிறார். மகாபாரப் போருக்கு செல்லவில்லை. இந்திய ஊடகங்கள் என்ன ஒரு முட்டாள்தனமான விவாதத்தை வைக்கின்றன.

போரைப் பற்றி கவலைப்படும் சில இந்திய ஊடகங்கள், தொழில்ரீதியாக டோனியை ராணுவ வீரராக்கி, அவரை சிரியா, ஆப்கானிஸ்தான் அல்லது ரவாண்டாக்கு அனுப்பி வையுங்கள். முட்டாள்கள்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers