தோழியுடன் இருந்த கிரிக்கெட் வீரர் மர்ம கும்பலால் குத்தி கொலை... வெளியான பின்னணி

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

மும்பையில் கிரிக்கெட் வீரர் ஒருவரை மர்ம கும்பல் கத்தியால் குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை பாண்டூப் பகுதியைச் சேர்ந்தவர் ராகேஷ் பன்வார். கிரிக்கெட் வீரரான இவர், சிறுவர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி அளித்து வந்தார்.

நேற்று இரவு தனது தோழியுடன் பாண்டூப் பகுதிக்கு சென்றிருந்தார். அப்போது அங்கு வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், ராகேஷை கத்தியால் சரமாரிக் குத்திக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றது.

இதனால் சம்பவ இடத்திலேயே ராகேஷ் உயிரிழந்தார்.

ராகேஷ் நண்பர் கோவிந்த் ரத்தோர் கூறுவையில், ராகேஷுக்கும் அவர் வசிக்கும் பகுதியில் இருந்த கான் குடும்பத்தினருக்கும் ஏற்கனவே முன் விரோதம் இருந்து வந்த நிலையில் அவர்கள் இந்த செயலை செய்திருக்கலாம் என கூறியுள்ளார்.

இந்நிலையில் ராகேஷ் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பிய பொலிசார் இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers