இங்கிலாந்திற்கு புறப்படும் தமிழக வீரர் அஷ்வின்

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளரான அஷ்வின் நாட்டிங்ஹாம் டிரிங் அணிக்காக விளையாட இங்கிலாந்திற்கு புறப்படுகிறார்.

உலகக்கிண்ணம் தொடரானது வரும் 30ம் திகதி துவங்கி ஜூலை 14ம் திகதியுடன் முடிவடைய உள்ளது. இதில் இந்தியா உள்ளிட்ட 10 அணிகள் பங்கேற்க உள்ளன.

இதற்கான பயிற்சி போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஆனால் இந்திய அணிக்காக பல சாதனைகள் செய்த தமிழக வீரர் அஷ்வின், இந்த முறை அணியில் இடம்பிடிக்கவில்லை.

உலகக்கிண்ணம் போட்டி நடைபெற உள்ள அதே வேளையில், இங்கிலாந்தில் உள்ளூர் தொடரான கவுண்டி கிரிக்கெட் தொடரும் நடைபெற்று கொண்டிருக்கிறது.

இதில் நாட்டிங்ஹாம் டிரிங் அணிக்காக அஷ்வின் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அதில் கலந்துகொள்வதற்காக தற்போது இங்கிலாந்து செல்ல உள்ளார்.

முன்னதாக 2017ம் ஆண்டு கவுண்டி கிரிக்கெட்டில் வொர் செஸ்டர்ஷைர் அணிக்காக 4 போட்டிகளில் விளையாடிய அஷ்வின் 20 விக்கெட்டுகளை கைப்பற்றியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers