இந்தியா அதிக உயரங்களை உங்களால் தொடும்.. மோடிக்கு வாழ்த்து கூறிய கோஹ்லியின் ட்வீட்!

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று மீண்டும் பிரதமராக உள்ள நரேந்திர மோடிக்கு, இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. நரேந்திர மோடியின் பா.ஜ.க ஆட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, இரண்டாவது முறையாக ஆட்சியமைக்க உள்ளது.

இதனைத் தொடர்ந்து, உலக தலைவர்கள் பலர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில், இந்திய கிரிக்கெட் அணித்தலைவர் விராட் கோஹ்லி தனது ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து கூறியுள்ளார்.

அவர் கூறுகையில், ‘வாழ்த்துக்கள் @நரேந்திரமோடி ஜி. உங்களின் பார்வையில் இந்தியா மிகப்பெரிய உயரங்களை தொடும் என்று நாங்கள் நம்புகிறோம். ஜெய்ஹிந்த்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers