பிரபல WWE சூப்பர் ஸ்டார் வீராங்கனை அஷ்லே மஸாரோ திடீர் மரணம்! அதிர்ச்சியில் ரசிகர்கள்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

பிரபல WWE சூப்பர் ஸ்டார் வீராங்கனை அஷ்லே மஸாரோ திடீரென மரணமடைந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உலகின் பிரபலமான விளையாட்டுகளில் ஒன்றான WWE-வில், சூப்பர் ஸ்டார் என்று வர்ணிக்கப்பட்ட வீராங்கனை அஷ்லே மஸாரோ(39). 2005-2008 காலகட்டங்களில் முன்னணி வீராங்கனையாக திகழ்ந்த இவருக்கு, உலகம் முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

பல்வேறு போட்டிகளில் பங்கேற்று பட்டம் வென்ற அஷ்லே, இடையில் மல்யுத்தத்தை (WWE) விட்டு விலகி மொடலிங் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வந்தார். அதனைத் தொடந்து மீண்டும் மல்யுத்தத்திற்கு திரும்ப முடிவு செய்திருந்தார்.

இந்நிலையில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் வசித்து வந்த அஷ்லே, நேற்று முன் தினம் திடீரென மரணமடைந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை அறிந்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

மேலும் வீரர்கள், வீராங்கனைகள் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர். இன்னும் 10 நாட்களில் தனது 40வது பிறந்தநாளை கொண்டாடவிருந்த அஷ்லே திடீரென மரணமடைந்தது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...