உடல் ஊனமான ராணுவ வீரர்களுடன் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிட்ட குமார் சங்ககாரா: வைரலாகும் புகைப்படங்கள்

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கயை சேர்ந்த 60 ஊனமுற்ற ராணுவ வீரர்கள் குமார் சங்ககாரவுடன் அவரின் ஹொட்டலில் நேரத்தை கழித்த நிலையில் அது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

Vesak தினத்தின் கொண்டாட்ட நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக இலங்கையை சேர்ந்த 60 ஊனமான ராணுவ வீரர்கள் இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்ககாராவின் மினிஸ்டரி ஆப் கிராப் ஹொட்டலுக்கு நேற்று மதியம் வரவழைக்கப்பட்டனர்.

அங்கு எல்லோரும் உணவு பரிமாறப்பட்டது, இதையடுத்து ராணுவ வீரர்களுடன் குமார் சங்ககாரா கலகலப்பாக உரையாடினார்.

ராணுவ வீரர்களும் புன்முறுவலுடன் சங்ககாராவுடன் பேசியபடி இருந்தார்கள்.

இது தொடர்பான புகைப்படங்களை பிபிசி செய்தியாளர் அசாம் அமீம் டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அது வைரலாகியுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்