ரசிகர்களின் அன்பிற்கு நன்றி தெரிவித்த ஷேன் வாட்சன்: வெளியிட்ட உருக்கமான வீடியோ

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

அன்பால் நெகிழ வைத்த ரசிகர்களுக்கு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் ஷேன் வாட்சன் நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

12வது ஐ.பி.எல் தொடரின் இறுதிப்போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஒரு ரன் வித்தியாசத்தில் மும்பை அணியிடம் தோல்வியடைந்தது.

சென்னை அணியில் தொடக்க வீரராக களமிறங்கிய ஷேன் வாட்சன் கடைசி வரை போராடி 80 ஓட்டங்கள் விளாசினார். அத்துடன் அவர் காலில் ரத்தம் வழிந்ததையும் பொருட்படுத்தாமல் விளையாடிய புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த ரசிகர்கள், வெற்றிக்காக போராடிய வாட்சனுக்கு பாராட்டுக்களை தெரிவித்தனர். சில தினங்களாகவே அவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் இருந்தது.

இதனைத் தொடர்ந்து, ரசிகர்களின் அன்பினால் நெகிழ்ச்சியடைந்த வாட்சன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில், ‘கடந்த 2 நாட்களாக ஆதரவு தெரிவித்த அனைத்து ரசிகர்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

மும்பை அணிக்கு எதிரான இறுதி ஆட்டத்தில் கடைசி வரை முயன்று 1 ரன்னில் தான் தோல்வியடைந்தோம். ஆனாலும் மிகவும் சிறப்பான ஆட்டமாகும்.

அடுத்த ஆண்டு இன்னும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த விரும்புகிறேன். உங்கள் ஆதரவுக்கு மீண்டும் ஒருமுறை எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன், விசில் போடு’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்