ரிஷாப் பண்டிற்கு தமிழ் கற்றுத் தரும் டோனி மகள்! வைரலாகும் வீடியோ

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய அணியின் இளம் வீரர் ரிஷாப் பண்டிற்கு, டோனியின் மகள் தமிழ் கற்றுத் தரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

விசாகப்பட்டினத்தில் நேற்று நடைபெற்ற போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது. இந்த தொடரின் தொடக்கத்தில் இருந்தே டோனிக்கும், ரிஷப் பண்டிற்கும் இடையே ஒரு வித போட்டி நிலவி வந்தது.

இருவருமே தங்களது அணிக்காக சிறப்பான பங்களிப்பை தமது துடுப்பாட்டத்தின் மூலம் அளித்தனர். இந்நிலையில் நேற்றைய தினம் போட்டி முடிந்ததும் மைதானத்தில் டோனியும், ரிஷாப் பண்ட்டும் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.

இதுதொடர்பான வீடியோ ஒன்றை ஐ.பி.எல் நிர்வாகம் தமது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதில் டோனி, ரிஷப் பண்டிற்கு ஆலோசனை கூறுவது போல் இருந்தது. இதற்கிடையில் டோனியின் மகள் ஜிவா, ரிஷாப் பண்டிற்கு தமிழ் கற்றுக் கொடுப்பது போன்ற வீடியோ ஒன்றும் வெளியாகியுள்ளது.

அதில் டோனி மகள் ஜிவா தனது கொஞ்சும் தமிழில் ‘அ.. ஆ.. இ.. ஈ’ என பண்டிற்கு சொல்லிக் கொடுக்கிறார். அவரும் அதனை அப்படியே திருப்பிச் சொல்கிறார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...