பார்சிலோனாவுக்கு எதிரான அரையிறுதி! லிவர்பூல் ரசிகர்களுக்கு மோசமான செய்தி

Report Print Gokulan Gokulan in ஏனைய விளையாட்டுக்கள்

சாம்பியன்ஸ் லீக் கால்பந்து தொடரில் பார்சிலோனாவுக்கு எதிரான அரையிறுதி இரண்டாவது லெக் போட்டியிலிருந்து லிவர்பூல் அணியின் நட்சத்திர வீரர் முகமது சாலா வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சனிக்கிழமை நியூகேஸ்டில்-லிவர்பூல் அணிகள் மோதிய போட்டியில் லிவர்பூல் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றிப்பெற்றது. போட்டியின் போது லிவர்பூல் நட்சத்திர வீரர் முகமது சாலாவும், நியூகேஸ்டில் அணியின் கோல் கீப்பர் மார்டின் டப்வாவாவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டனர்.

இதில் தலையில் அடிப்பட்ட சாலா மைதானத்திலே நிலைகுலைந்து விழுந்தார். பின்னர், மைதானத்திலிருந்து ஸ்ட்ரெச்சர் மூலம் கொண்டு செல்லப்பட்டார்.

இந்நிலையில் அவருக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் சாலா நலமாக தான் உள்ளார், எனினும் அவர் விளையாடும் அளவிற்கு நலமாக இல்லை என தெரிவித்துள்ளனர்.

மெஸ்சியின் பார்சிலோனா அணிக்கு எதிராக லிவர்பூர் நட்சத்திர வீரர் சாலா விளையாடமாட்டார் என்ற செய்தி லிவர்பூர் ரசிகர்களிடையே ஏமாற்றதை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers