சேவாக்கை போல் எல்லா பந்துகளையும் விளாசும் 5 வயது சிறுவன்! அசத்தலான வீடியோ

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் போல, ஐந்து வயது சிறுவன் நாலாபுறமும் பந்துகளை விளாசும் வீடியோவை அவனது தந்தை வெளியிட்டுள்ளார்.

ஆட்டத்தின் முதல் பந்தையே பவுண்டரியுடன் தொடங்குபவர் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் சேவாக். தொடக்க வீரராக களமிறங்கும் அவர் மைதானத்தின் எல்லா புறங்களில் சிக்சர், பவுண்டரிகளை விளாசுவார்.

இந்நிலையில், சேவாக்கின் ரசிகரான ருஷிகேஷ் பாதவ் என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அந்த வீடியோவில் அவரது மகன் பேட்டிங் செய்கிறார். அவர் தான் எதிர்கொள்ளும் எல்லா பந்துகளையும் விளாசுகிறார்.

இதனை ருஷிகேஷ் குறிப்பிடுகையில், ‘வீரு சார், இது எனது 5 வயது மகன் Rudransh, இந்த ஷாட் உங்களை நினைவுபடுத்துகிறது’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers