நான் திமிர் பிடித்தவனா? உளவியல் மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறேன் வாங்க! அப்ரிடிக்கு பதிலடி கொடுத்த காம்பீர்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

இந்தியாவுக்கு வாருங்கள், உங்களை உளவியல் மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறேன் என்று இந்திய முன்னாள் வீரர் கவுதம் காம்பீர், பாகிஸ்தான் வீரர் அப்ரிடிக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஷாகித் அப்ரிடி, தனது கிரிக்கெட் வாழ்க்கை குறித்து ‘The Game Changer' எனும் புத்தகத்தை எழுதியுள்ளார். அதில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரான கவுதம் காம்பீர் குறித்து கடுமையாக விமர்சித்து எழுதியுள்ளார்.

அதாவது, காம்பீருக்கு மனரீதியாக ஏதோ பிரச்சனை இருக்கிறது. அவருக்கு எந்தவிதமான ஆளுமைத் திறனும் கிடையாது. ஆனால் ஏராளமான திமிருடன் நடந்து கொள்வார் என்று குறிப்பிட்டுள்ளார்.

AP/PTI

இந்நிலையில், அப்ரிடிக்கு பதிலடி கொடுக்கும் வகையில் காம்பீர் தற்போது தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறுகையில்,

‘ஷாகித் அப்ரிடி, நீங்கள் மனநிலை பாதிக்கப்பட்டவர். எப்படியாகினும், பாகிஸ்தானைச் சேர்ந்தவர்களுக்கு மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள இந்திய அரசு விசாவை இன்னும் வழங்குகிறது.

PTI

இந்தியாவுக்கு வாருங்கள், தனிப்பட்ட முறையில் நான் உங்களை உளவியல் மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers