டோனிக்கு தடை விதிப்பது மிகச்சரியானது: இங்கிலாந்தில் இருந்து ஒலித்த குரல்

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

ஜெய்ப்பூரில் நடந்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் நோ பால் விவகாரம் தொடர்பாக மைதானத்திற்குள் வந்து நடுவருடன் சண்டைபோட்ட டோனிக்கு 3 போட்டிகளில் விளையாட தடைவிதிக்க வேண்டும் என்று சேவாக் கூறியதற்கு இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வான் ஆதரவு தெரிவித்துள்ளார்.

நடுவருடன் வாக்குவாதம் செய்து அவரை அவமதித்த குற்றத்திற்காக, டோனிக்கு 2 போட்டிகள் அல்லது 3 போட்டிகளில் விளையாட தடை விதித்திருக்க வேண்டும்.

ஏனென்றால், நாளை வேறு ஒரு அணியின் கேப்டனும் இதேபோன்று செய்யமாட்டார் என்பதில் என்ன உத்தரவாதம் இருக்கிறது என இந்திய அணியின் முன்னாள் வீரார் விரேந்திர சேவாக் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இதுகுறித்து மைக்கேல் வான் தனது டுவிட்டரில் கூறியதாவது, டோனி செய்த காரியம் ஏற்க முடியாதது என்பதை பிற வீரர்களுக்கும் செய்தியாகத் தெரிவிக்குமாறு அவருக்கு 2 போட்டிகள் தடை விதித்துத்தான் இருக்க வேண்டும் என சேவாக்கின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்