விராட் கோஹ்லிக்காக இங்கிலாந்து வீரருடன் சண்டை போட்ட நடிகர்

Report Print Deepthi Deepthi in ஏனைய விளையாட்டுக்கள்

நடந்து வரும் ஐபிஎல் தொடரில் கோஹ்லி தலைமையிலான பெங்களூரு அணி தொடர்ந்து 6 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளதால், இது கோஹ்லியின் தன்னம்பிக்கை பாதித்துவிடும் என்பதற்காக அவருக்கு உலகக்கோப்பை முன் ஓய்வு வழங்க வேண்டும் என இங்கிலாந்து வீரர் கூறிய கருத்துக்கு நடிகர் சதீஷ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

முன்னாள் இங்கிலாந்து வீரர் மைக்கேல் வான் தனது டுவிட்டர் பக்கத்தில், வரவிருக்கும் உலகக் கோப்பைக்காக இப்போதே கோலிக்கு ஓய்வு கொடுக்க வேண்டும். ஏனெனில், ஐபிஎல் போட்டியின் தொடர் தோல்விகள் கோஹ்யின் தலைமைப் பண்புகளை, தன்னம்பிக்கையை பாதிக்கலாம் என கருத்து தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள நடிகர் சதீஷ், விராட் கோஹ்லி மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது, உங்கள் வீரர்களுக்கு நீங்கள் அறிவுரை சொல்லுங்கள், எங்களுக்கு அறிவுரை வழங்கி உங்கள் நேரத்தை வீணாக்கி கொள்ள வேண்டாம்.

அதுமட்டுமல்லாது எங்கள் தல டோனி அவருக்கு வழிகாட்ட இருக்கிறார் என பதிவிட்டிருந்தார்.

இதற்கு பதிலளித்த வான், தொடர்ந்து விளையாடிக்கொண்டிருக்கும் கோஹ்லிக்கு சிறிது ஓய்வு கொடுக்கலாம். குறைந்தது இரண்டு வாரமாவது ஓய்வு எடுக்கலாம். அவருக்கும் சில கவனிப்புகள் தேவைப்படுகிறது என்று விளக்கம் அளித்தார்.

ஆனால் சதீஷ் மீண்டும், ஐபிஎல் போட்டியின் தோல்வி எங்கள் உற்சாகத்தை குறைக்காது, கோஹ்லி மிகவும் வலிமை கொண்டர் என பதிவிட்டுள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்