இம்ரான் தாஹிரின் மகனை தூக்கிக்கொண்டு ஓடிய டோனி! வைரலாகும் வீடியோ

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணித்தலைவர் டோனி, சக அணி வீரர்களான ஷேன் வாட்சன், இம்ரான் தாஹிர் ஆகியோரது குழந்தைகளுடன் விளையாடி மகிழ்ந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஐ.பி.எல் தொடரில் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில், டோனி தலைமையிலான சென்னை அணி 22 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் அணியை வீழ்த்தியது.

போட்டி முடிந்ததும் சக அணி வீரர்களான ஷேன் வாட்சன், இம்ரான் தாஹிர் ஆகியோரது மகன்கள் மைதானத்தில் விளையாட்டாக தங்களுக்குள் ஓட்டப் பந்தயத்துக்கு தயாராகிக் கொண்டிருந்தனர்.

அப்போது அவர்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த டோனி, சிறுவர்கள் இருவரும் ஓடுவதற்கு முன்னதாகவே அவர் ஓடத் தொடங்கிவிட்டார். அதன் பின்னர் இம்ரான் தாஹிர் மகனை டோனி தூக்கிக் கொண்டு தொடங்கிய இடத்திற்கு திரும்ப ஓடி வந்தார்.

இதுதொடர்பான வீடியோவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers