பாரிசில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட கால்பந்து ஜாம்பவான்!

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

கால்பந்து விளையாட்டின் ஜாம்பவான் பீலே, சிறுநீர் தொற்று காரணமாக பாரிசில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பிரேசில் கால்பந்து அணியின் ஜாம்பவானான பீலே, கடந்த 1958, 1962 மற்றும் 1972ஆம் ஆண்டுகளில் தனது அணிக்கு உலகக் கோப்பையைப் பெற்றுக் கொடுத்தவர்.

உலகளவில் ஏராளமான கால்பந்து ரசிகர்களை கொண்டுள்ள பீலே, அவ்வப்போது உடல்நலக் கோளாறுகளை சந்தித்து வருகிறார்.

78 வயதான அவர், பிரான்ஸ் நாட்டில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொள்ள வந்தார். ஆனால், அங்கு அவருக்கு சிறுநீர் தொற்று ஏற்பட்டதால் பாரிசில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு பீலேவுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தற்போது பீலே உடல் நலம் தேறி இருப்பதாகவும், இன்னும் ஓரிரு நாட்களில் அவர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுவார் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers

loading...