சூதாட்டத்தில் சிக்கிய இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் கைது!

Report Print Vijay Amburore in ஏனைய விளையாட்டுக்கள்

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் முன்னாள் பயிற்சியாளர் துசார் அரோத் ஐபிஎல் சூதாட்டத்தில் ஈடுப்பட்டதாக கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

52 வயதான துசார் அரோத் இந்திய பெண்கள் அணியின் பயிற்சியாளராக கடந்த 2017-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நியமிக்கப்பட்டார். அதற்கு முன்பாக 2008 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரை இந்திய அணியின் பீல்டிங் பயிற்சியாளராகவும், தலைமை பயிற்சியாளராகவும் பணியாற்றினார்.

இவரது தலைமையின் கீழ் மகளிர் அணி, 2017 ஆம் ஆண்டில் ICC மகளிர் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றது. 2018 ஆம் ஆண்டில், தென் ஆப்பிரிக்காவில் மூன்று போட்டிகளில் ஒரு நாள் சர்வதேச மற்றும் ஒருநாள் சர்வதேச தொடரை வென்றது.

ஆனால் பிசிசிஐ மூத்த வீரர்கள், குறிப்பாக 20 ஓவர் போட்டியின் கேப்டன் ஹர்மன் பிரீத் கவுர் பயிற்சியாளரை பற்றி புகார்களை வெளியிட்ட பிறகு பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில் நேற்றைக்கு முன்தினம் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் ஆகிய அணிகளுக்கு இடையில் நடைபெற்ற போட்டியில் சூதாட்டத்தின் ஈடுபட்டதாக அரோத் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதுகுறித்து பேசிய டி.ஜி.பி ஜெய்தீட்ச்சிங் ஜடேஜா, ஆல்காபுரியில் உள்ள கபே பகுதியில் ஐபிஎல் சூதாட்டம் நடப்பதாக எங்களுக்கு தகவல் வந்தது. தகவலின் அடிப்படையில் சோதனையில் ஈடுபட்டபோது, அங்கு செல்போன்கள் மூலம் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்ட துசார் அரோத் உள்ளிட்ட 19 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த செல்போன்களை பறிமுதல் செய்துள்ளோம்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers