சென்னை அணி பயிற்சியாளர் பிளமிங்கின் முகத்தில் கேக்கை பூசிய வீரர்கள்! வைரலாகும் வீடியோ

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கின் 46வது பிறந்தநாள் கொண்டாட்ட வீடியோ, தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் 8 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

ஹாட்ரிக் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் ஓய்வு அறைக்கு சென்ற சென்னை அணி வீரர்கள், பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங்கின் 46வது பிறந்த நாளை கொண்டாட கேக் வெட்டினர்.

அத்துடன் கேக்கை அவரது முகத்தில் பூசி, பாட்டு பாடி மகிழ்ந்தனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

8 அணிகள் விளையாடி வரும் ஐ.பி.எல்-யில் தொடரில், சென்னை அணி ஹாட்ரிக் வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடம் வகிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்