மது அருந்திய நிலையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்திய இலங்கை கிரிக்கெட் அணி தலைவர் கருணரத்னே கைது

Report Print Raju Raju in ஏனைய விளையாட்டுக்கள்

இலங்கை டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவர் திமுத் கருணரத்னே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய போது விபத்து ஏற்படுத்திய நிலையில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சமீபத்தில் நடந்து முடிந்த தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இலங்கை அணியின் கேப்டனாக செயல்பட்டவர் திமுத் கருணரத்னே.

அந்த தொடரை இலங்கை வென்று வரலாற்று சாதனை படைத்தது.

இந்நிலையில் கொழும்புவில் உள்ள Borella பகுதியில் கருணரத்னே மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய நிலையில் விபத்தை ஏற்படுத்தியுள்ளார்.

இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார், இந்நிலையில் கருணரத்னே ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

Latest Offers