வங்கதேச வீரரின் திருமண நிச்சயதார்த்தத்தில் டோனியின் டி-சர்ட்! வைரலாகும் புகைப்படம்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

வங்கதேச கிரிக்கெட் அணி வீரர் சபீர் ரஹ்மானின் திருமண நிச்சயதார்த்தம் தொடர்பான புகைப்படத்தில் டோனியின் டி-சர்ட் இடம்பெற்றுள்ளது வைரலாகி வருகிறது.

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட வங்கதேச கிரிக்கெட் அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரை இழந்தது. கிறிஸ்ட்சர்ச் பகுதியில் இருக்கும் 2 மசூதிகளில் தீவிரவாதி நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 49க்கும் மேற்பட்டோர் பலியாகினர்.

அப்போது வங்கதேச அணி வீரர்கள் அதிர்ஷ்டவசமாக நூலிழையில் உயிர் தப்பியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் வங்கதேச அணி வீரர் சபீர் ரஹ்மானின் திருமண நிச்சயதார்த்தம் அவரது வீட்டில் நடந்தது.

வீட்டின் சுவரில் டோனியின் டி-சர்ட் Frame செய்யப்பட்ட புகைப்படம் உள்ளது. இதன்மூலம் சபீர் ரஹ்மான், டோனியின் ரசிகர் எனக் கூறி அவரது திருமண நிச்சயதார்த்த புகைப்படத்தை பலர் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அத்துடன் 2016ஆம் ஆண்டு நடந்த டி20 உலகக் கிண்ணப் போட்டியில், சபீர் ரஹ்மான் இந்திய வீரர் டோனியினால் ஸ்டம்பிங் செய்யப்பட்ட புகைப்படத்தையும் பதிவு செய்து அவரது பெயரை குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்