தல பாட்டு போட.. நான் டான்ஸ் ஆட..! நகைச்சுவையாக தமிழில் ட்வீட் செய்த ஹர்பஜன் சிங்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

ஐ.பி.எல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் நகைச்சுவையாக ட்வீட் செய்துள்ளார்.

12வது ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டிகள் வருகிற 23ஆம் திகதி தொடங்க உள்ளது. முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ்-ராயல் சேலஞ்சர்ஸ் அணிகள் மோத உள்ளன.

இந்தப் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைச் சேர்ந்த வீரர்கள் சென்னை வந்து பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்களில் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங், பயிற்சிக்கு இடையே விளம்பர படங்களுக்கான படப்பிடிப்பிலும் கலந்துகொள்கிறார். இதுகுறித்து அவர் தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

அதில் சென்னை வந்தவுடன் படப்பிடிப்பா என்றும், டோனி பாடல் போடவும், தானும் கேதார் ஜாதவும் நடனமாடவும், இரண்டு மாதங்களும் ஒரே குதூகலமாக இருக்கப்போவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் போட்டி என்று வந்துவிட்டால் சென்னை அணி தங்களது திறமையை காட்டுவார்கள் என்பது போல் எங்களது ஆட்டத்தை பார்க்கத்தான் போகிறீர்கள் என்று தமிழில் ட்வீட் செய்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்