52 வயதிலும் சற்றும் குறையாத வேகம்! வைரலாகும் மைக் டைசனின் வீடியோ

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

பிரபல குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் ஓய்வு பெற்ற நிலையில், சமீபத்தில் காற்றில் குத்துவிட்ட காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

உலக அளவில் பிரபலமான குத்துச்சண்டை வீரர் மைக் டைசன் 58 போட்டிகளில் விளையாடி 50 வெற்றிகளைப் பெற்றவர். தற்போது ஓய்வில் இருக்கும் டைசன், சமீபத்தில் பார் ஒன்றில் இரண்டு நபர்களுக்கு குத்துச்சண்டை குறித்த நுணுக்கங்களை கூறிக் கொண்டு, குத்துச்சண்டை செய்வது போல் செய்து காட்டினார்.

அப்போது அவர் காற்றில் குத்துவிட்ட வேகமும், எதிராளி தாக்கினால் எப்படி விலகுவது, அடுத்து எப்படி அவரை தாக்குவது என செய்து காட்டிய வேகம் அனைவரையும் பிரமிக்க வைத்தது.

இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. சுமார் 23 லட்சம் பேர் இந்த வீடியோவை கண்டு ரசித்துள்ளனர். 52 வயதிலும் வேகம் குறையாத மைக் டைசனை பார்த்து ரசிகர்கள் வியந்துள்ளனர்.

மைக் டைசன் கடந்த 2000ஆம் ஆண்டில் லூ சாவரீஸ் என்ற வீரரை வெறும் 38 வினாடிகளில் வீழ்த்தி பார்வையாளர்களை அசர வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்