இலங்கை கிரிக்கெட் ஜாம்பவானுக்கு எதிராக பாய்ந்த நடவடிக்கை

Report Print Arbin Arbin in ஏனைய விளையாட்டுக்கள்

ஐசிசி-யின் ஊழல் தடுப்பு விதிமுறையை மீறியதாக கூறி இலங்கை கிரிக்கெட் அணியின் ஜாம்பவான் ஜெயசூர்யாவுக்கு இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட் வாரியத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டை ஐசிசி-யின் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.

குற்றச்சாட்டு எழுந்த காலகட்டத்தில் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரரான சனத் ஜெயசூர்யா தேர்வுக்குழு தலைவராக இருந்தார்.

இவரிடம் ஊழல் தடுப்புப் பிரிவு விசாரணை மேற்கொள்ள முடிவு செய்தது. ஆனால் சனத் ஜெயசூர்யா விசாரணைக்கு ஒத்துழைக்கவில்லை.

அத்துடன் முக்கியமான ஆவணங்களை மறைத்து விட்டதுடன், ஆதாரங்களை அழித்து விட்டார் என்று குற்றம் சாட்டப்பட்டது.

இந்நிலையில் ஐசிசி அவருக்கு இரண்டு ஆண்டுகள் தடைவிதித்துள்ளது. இந்த காலக்கட்டத்தில் அவர் எந்தவொரு கிரிக்கெட்டிலும் செயல்பட முடியாது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்