நமது வீரர்கள் சிறப்பாக விளையாடினார்கள்! கிரிக்கெட்டைப் போல் இந்திய ராணுவத்தை பாராட்டிய சேவாக்

Report Print Kabilan in ஏனைய விளையாட்டுக்கள்

பாகிஸ்தான் தீவிரவாத முகாம்கள் மீது இந்திய விமானப்படை அதிரடித் தாக்குதல் நடத்தியுள்ள நிலையில் விமானப்படை வீரர்களை, இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சேவாக் வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

புல்வாமா தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, இந்திய ராணுவ விமானப்படை இன்று அதிகாலை எல்லை தாண்டிச் சென்று தீவிரவாதிகள் முகாம்கள் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது.

இந்த தாக்குதலில் பாகிஸ்தானில் இயங்கிய முக்கிய தீவிரவாத முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சமூக வலைதளங்களிலும், பிரபலங்கள், அரசியல் தலைவர்களிடமிருந்தும் இந்திய விமானப்படைக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Reuters

இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் அணி வீரர் வீரேந்தர் சேவாக் கிரிக்கெட் வீரர்களுக்கு வாழ்த்து தெரிவிக்கும் பாணியில் இந்திய விமானப்படையினரை பாராட்டியுள்ளார்.

அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ‘நமது வீரர்கள் மிகவும் சிறப்பான ஆட்டத்தை ஆடியுள்ளனர்’ என தெரிவித்துள்ளார். முன்னதாக புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த வீரர்களின் கல்விச் செலவையும் ஏற்பதாக சேவாக் அறிவித்திருந்தார்.

இதே போல் கவுதம் கம்பீர் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ஜெய்ஹிந்த் ஐ.ஏ.எஃப்’ என தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்